இந்தியா

அமிர்தசரஸில் போட்டியிட மன்மோகன் சிங் மறுப்பு?

அமிர்தசரஸில் போட்டியிட மன்மோகன் சிங் மறுப்பு?

webteam

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துவிட்ட்தாகக் கூறப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவி காலம், ஜூன் 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் வரும் மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுமாறு, பஞ் சாப் முதல்வர் அமரிந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், மற்றும் மாநில பொறுப்பாளர் ஆஷா குமாரி ஆகியோர் அவரிடம் கேட்டனர். ஆனால்,  மன்மோகன் சிங், அவர்களிடம் சாதகமான பதிலை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

மன்மோகன் சிங்கை, அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க 2009- ஆம் ஆண்டு தேர்தலின் போதும் முயற்சிக்கப்பட்டது. தனது உடல்நிலை யை காரணம் காட்டி அவர் மறுத்து விட்டார்.

பிரிவினைக்குப் பின், பாகிஸ்தானின் கஹ் (Gah) பகுதியில் இருந்து அமிர்தசரஸுக்குத்தான் மன்மோகன் சிங்கின் குடும்பம் வந்தது. அங்குள்ள இந்து கல்லூரியில்தான் மன்மோகன் சிங் படித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் மன்மோகன் சிங் இதுவரை வெற்றி பெற்றதில்லை. 1999 ஆம் ஆண்டு தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர்,  பாஜக வேட்பாளர் மல்கோத்ராவிடம் தோல்வி அடைந்தார். தற்போது, அசாமில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் மன்மோகன் சிங், அங்கிருந்து மீண்டும் தேர்வாவதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.