இந்தியா

நெய்வேலி என்.எல்.சி விபத்து வேதனையளிக்கிறது : அமித்ஷா

நெய்வேலி என்.எல்.சி விபத்து வேதனையளிக்கிறது : அமித்ஷா

webteam

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி அனல்மின்நிலைய விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “நெய்வேலியில் உள்ள என்.எல்.சி அனல்மின்நிலைய விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமியிடம் தெரிவித்தேன். ஏற்கெனவே மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.