இந்தியா

“மதச் சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாகப் பாடுபடுகிறது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

“மதச் சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாகப் பாடுபடுகிறது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

webteam

இந்தியாவில் மதச் சுதந்திரம் சிறப்பாக உள்ளது என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, ட்ரம்ப் மோடியுடனான சந்திப்பு குறித்து பதிலளித்து வருகிறார். அதில், ஹெச்1-பி விசா குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாகவும், சிஏஏ குறித்து பேசவில்லை; ஆனால் மதச் சுதந்திரம் குறித்து பேசியதாகவும் தெரிவித்தார். அத்துடன் மதச் சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாகப் பாடுபட்டு வருவதாகவும் கூறினார்.

டெல்லி வன்முறை குறித்து கேள்விப்பட்டதாகவும், அதுகுறித்து பிரதமரிடம் பேசவில்லை எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி டெல்லி வன்முறை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை எனவும் கூறினார். இந்தியா வலிமையான நாடு என்றும், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும் கூறினார். 

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும், இந்தியா-பாகிஸ்தான் இடையே நெருடலான விஷயமாக காஷ்மீர் இருப்பதாகவும் தெரிவித்தார்.