கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
கர்நாடகா அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆளும் மத சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 அமைச்சரகளும் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், தற்போது மத சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடகா அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களில் முதலமைச்சர் குமராசாமி தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.