இந்தியா-பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு இடையேயான அஜேயா வாரியர் கூட்டுப்பயிற்சி ஜெய்ப்பூரில் நாளை தொடங்குகிறது.
ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள ராணுவ கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் ராணுவ வீரர்கள் நேற்று இந்தியா வந்தடைந்தனர். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டன் வீரர்களை இந்திய ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து நேராக பயிற்சி நடைபெறும் மகாஜன் பகுதிக்கு அவர்கள் சென்றனர்.
இது இந்தியா-பிரிட்டன் பங்குபெறும் மூன்றாவது கூட்டுப்பயிற்சி என்று பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் லெப்டினட் கர்னல் மனிஷ் ஓஜா தெரிவித்தார். நாளை தொடங்கும் இந்த கூட்டுப்பயிற்சி 14 நாட்கள் நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் சார்பாக 120 வீரர்கள் பங்கு பெற உள்ளனர். இந்த கூட்டுப் பயிற்சிக்கு அஜேயா கூட்டுப்பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவ உறவுகளை மேம்படுத்துவதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கம் ஆகும்.
கடந்த 2013 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெல்கயமில் நடைபெற்றது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவம் இங்கிலாந்து சென்றது குறிப்பிடத்தக்கது.