கடுமையான காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியில் நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது.
டெல்லியில் காற்றின் மாசு, ‘மிகவும் அபாயகரம்’ என்ற நிலையிலிருந்து குறைந்து தற்போது ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட அனைத்து அவசர நடவடிக்கைகளும் விலக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மாசின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்னும் குறைந்த மாசை ஏற்படுத்தும், யுரோ 6 தரத்திலான பெட்ரோல் மற்றும் டீசல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ரக பெட்ரோல் மற்றும் டீசலை இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து அறிமுகப்படுத்தவே முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே காற்று மாசை கட்டுப்படுத்த இணைந்து செயலாற்றுவது என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும், ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டாரும் முடிவு செய்துள்ளனர்.