இந்தியா

ஏர் இந்திய விமானிகளுக்கு ‘ஜெய் ஹிந்த்’ கட்டாயம்

ஏர் இந்திய விமானிகளுக்கு ‘ஜெய் ஹிந்த்’ கட்டாயம்

webteam

ஏர் இந்திய விமானத்தில் விமானி குழு தங்களது ஒவ்வொரு அறிவிப்பின் இறுதியிலும் ‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தையும் சேர்த்து கூறவேண்டும் என்று அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனம் ஏர் இந்தியா. இந்த நிறுவனம் விமானங்களை மற்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் விமானங்களை இயக்கிவருகிறது. தற்போது ஏர் இந்தியா கடும் நிதிச் சுமையில் சிக்கி தவித்து வருகிறது. 

இந்நிலையில் ஏர் இந்தியாவின் செயல் இயக்குநர் அமிதாப் சிங் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில்  “விமானி குழு தங்களது ஒவ்வொரு அறிவிப்பின் இறுதியிலும் ‘ஜெய் ஹிந்து’ என்னும் முழக்கத்தை கூறவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதே மாதிரியான அறிவிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டிலும் ஏர் இந்தியா விமானி குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைவராக அஸ்வானி லோஹனி ஒரு அறிவுறுத்தலை அளித்திருந்தார். அதன்படி “விமானத்தின் கேப்டன் பயணிகளுடன் உரையாற்றும் போதும் மற்றும் அறிவிப்பு அளிக்கும் போதும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழுக்கத்தை சேர்த்து கூறவேண்டும். அத்துடன் விமான பயணிகளிடம்  மிகவும் பணிவுடன் கண்ணியத்துடனும் நடந்து கொள்ளவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.