இந்தியா

கர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

கர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

Rasus

கர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அழைப்பை ஏற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். நாளை எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை கர்நாடக சட்டசபையில் நிரூபிக்க உள்ளார்.

இந்நிலையில் மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடகா சபாநாயர் உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது மேலும் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், மொத்தமாக 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.