இந்தியா

பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதால் ஏராளமான நன்மைகள்: பொருளாதார வல்லுநர் கருத்து

பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதால் ஏராளமான நன்மைகள்: பொருளாதார வல்லுநர் கருத்து

sharpana

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் திட்டம் உலகின் இரண்டாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான இந்தியாவிற்கு அதிக நன்மைகளைப் பயக்கும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதார வல்லுநர் தெரிவித்துள்ளார்.

பிரசவத்தின்போது தாய் இறப்புகளை குறைப்பது, இளம் பெண்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவது, அதிக சிறுமிகளை கல்லுரிக்கு அனுப்புவது, நீண்ட காலத்திற்கு பெண்களுக்கு அதிக நிதி சுதந்திரத்தை அடைய வைப்பது என பல்வேறு நன்மைகள் உள்ளன என்று எஸ்.பி.ஐயின் பொருளாதார வல்லுநரான செளமியா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.

செளமியா காந்தி கோஷ்

மேலும் அவர், ”இந்தியாவில் பெண்ணின் திருமண வயது சராசரியாக 18 ஆக இருந்தாலும் அதற்கு முன்பே திருமணம் செய்து கொள்பவர்கள் 35 சதவீதம் பேர். அதேபோல, முன்பே திருமணம் செய்துகொள்வதால், இந்தியாவில் பெண்கள் கால் பகுதியினர் கூட தொழிலாளர்களாக இல்லை.

இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 21 வயதாக உயர்த்தப்படலாம். இது ஆண்களைப் போலவே இருக்கும். பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கை தற்போது 9.8 சதவீதத்திலிருந்து  உயர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை சட்ட மற்றும் உளவியல் நன்மைகளையும் கொண்டிருக்கும்” என்கிறார்.

இந்தியாவில் பெண்களின் சரியான திருமண வயதை ஒரு அரசாங்கக் குழு கவனித்து வருகிறது. விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.