இந்தியா

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டே திடீர் கைது!

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டே திடீர் கைது!

webteam

சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டே, மும்பை விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் பீமா கோரேகான் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், எல்கர் பரிஷத் என்ற அமைப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. மாவோயிஸ்டுகள் ஆதரவு தெரிவித்த இந்தக் கூட்டத்தில் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள், சர்ச்சைக் குரியை கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு அடுத்த நாள், அங்கு நடத்தப்பட்ட தலித் பேர ணியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப் பட்டார். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அங்கு நடந்தன. 

இந்த கலவரத்துக்கு எல்கர் பரிஷத் அமைப்பு நடத்திய கூட்டம்தான் காரணம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந் தக் கூட்டத்தில் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள், வரவர ராவ், வெர்னோம் கான்ஸல்வாஸ், அருண் பெரேரா உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் ரெய்டும் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் அம்பேத்கரியல் ஆய்வாளரும் பேராசிரியரும் சமூக செயற்பாட்டாளமான ஆனந்த் தெல்டும் டே மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக அவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் பிப்ரவரி 11 ஆம் தேதி அவரை கைது செய்யக் கூடாது என்றும் அதே நேரம் கீழமை நீதிமன்றங் களில் முன் ஜாமின் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்று நினைத்த ஆனந்த் தெல்டும்டே , முன் ஜாமின் கோரி புனே, செ சன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பின்னர், முன் ஜாமின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் கேரளாவில் இருந்து இன்று காலை 3.30 மணிக்கு மும்பைக்கு வந்த அவரை, விமான நிலையத்தில் புனே போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், பிப்ரவரி 11 ஆம் தேதி அவரை அவரைக் கைது செய்ய, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது, சட்டவிரோதமானது என்று ஆனந்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.