இந்தியா

டெல்லி வன்முறை: தேசிய பெண்கள் ஆணையம் ஆய்வு

டெல்லி வன்முறை: தேசிய பெண்கள் ஆணையம் ஆய்வு

webteam

டெல்லியில் வன்முறை பாதித்த இடங்களில் தேசிய பெண்கள் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, டெல்லியின் வடகிழக்கு பகுதி போர்க்களமாக மாறியது. இந்த வன்முறையில் 39 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக வன்முறை ஏதும் நடைபெறவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் வன்முறை பாதித்த இடங்களில் தேசிய பெண்கள் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வன்முறையின்போது பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கண்டறிவதற்காக தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா தலைமையில் ஆய்வு நடைபெற்றது.