எதிர்க்கட்சித் தலைவர்கள் twitter
இந்தியா

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம்.. ஓர் புள்ளியில் இணைந்த எதிர்க்கட்சிகள்; பலன் கிட்டுமா?

பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜவுக்கு எதிராக வியூகம் வகுக்கப்பட்டதாக தெரிகிறது.

Prakash J

இந்த நிலையில், தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்தார்.

எதிர்க்கட்சிகளின் பலத்தைப் பார்க்கலாம். தற்போது நாடாளுமன்ற மக்களவையில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் 52 எம்.பிக்களை தன்வசம் வைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக, கேரளாவில் 15 எம்.பிக்களும், பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் தலா 8 எம்.பிக்களும் உள்ளனர். அஸாம் மற்றும் தெலங்கானாவில் தலா 3 எம்.பிக்கள், மேற்கு வங்கம், சத்தீஸ்கரில் தலா 2 எம்.பிக்கள் மற்றும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தலா ஒரு எம்.பி. என மொத்தம் 52 எம்.பிக்கள் உள்ளனர்.

Rahul Gandhi | Nitish Kumar | kharge

தற்போது நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக இருப்பது திமுகதான். இந்தக் கட்சிக்கு தமிழகத்திலிருந்து 24 எம்.பிக்கள் உள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்தில் 22 எம்.பிக்கள் உள்ளனர். பீகாரில் உள்ள 40 எம்.பிக்களில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 எம்.பிக்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி பிளவுபட்டபின் உத்தவ் தாக்கரேவுடன் 6 எம்.பிக்கள் எஞ்சியுள்ளனர்.

இதையடுத்து, பெரிய கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்குத் தலா 5 எம்.பிக்கள் உள்ளனர். இடதுசாரி கட்சிகளைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் இரண்டு, கேரளாவில் ஒன்று என மூன்று எம்.பி.கள் உள்ளனர். மற்றொரு இடதுசாரியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் 2 எம்.பி.கள் உள்ளனர். புரட்சிகர சோசலிச கட்சிக்கு கேரளாவில் ஒரு எம்.பி. உள்ளார். திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 எம்.பிக்களும் உள்ளனர்.

cm stalin

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேரளாவில் 2 எம்.பி.கள் உள்ளனர். ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 3 எம்.பி.களும், ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் ஒரு எம்.பி.யும் உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஒரு எம்.பி. உள்ளார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஓரிடம்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம்

காங்கிரஸ் கட்சி

கேரளா - 15

பஞ்சாப் - 8

தமிழ்நாடு - 8

அஸாம் - 3

தெலங்கானா - 3

மேற்கு வங்கம் - 2

சத்தீஸ்கர் - 2

உத்தரப்பிரதேசம் - 1

மகாராஷ்டிரா -1

பீகார் - 1

கர்நாடகா - 1

ஜார்க்கண்ட் - 1

மத்திய பிரதேசம் - 1

ஒடிஸா - 1

மேகாலயா - 1

புதுச்சேரி - 1

கோவா - 1

அந்தமான் - 1

திமுக

தமிழ்நாடு - 24

திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கம் - 22

ஐக்கிய ஜனதா தளம்

பீகார் - 16

சிவசேனா (உத்தவ் தாக்கரே)

மகாராஷ்டிரா - 6

சமாஜ்வாதி கட்சி

உத்தரப்பிரதேசம் - 5

தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிரா - 5

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தமிழ்நாடு - 2

கேரளா - 1

இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ்நாடு - 2

புரட்சிகர சோசலிச கட்சி

கேரளா - 1

மதிமுக

தமிழ்நாடு - 1

விடுதலைச் சிறுத்தைகள்

தமிழ்நாடு - 2

இந்திய யூனியன் முஸ்லிக் லீக்

கேரளா - 2

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

ஜம்மு காஷ்மீர் - 3

ஆம் ஆத்மி

பஞ்சாப் - 1

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

ஜார்க்கண்ட் - 1