இந்தியா

சாலையிலேயே குழந்தை பெற்ற கர்ப்பிணி ; பிரசவத்திற்கு பின் 150 கிமீ நடைபயணம்!!

சாலையிலேயே குழந்தை பெற்ற கர்ப்பிணி ; பிரசவத்திற்கு பின் 150 கிமீ நடைபயணம்!!

webteam

ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தினசரி கூலித்தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊரைத் தேடி பயணிக்க ஆரம்பித்தனர். பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தொழிலாளி ஒருவர் தன் கர்ப்பிணி மனைவியுடன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திற்கு நடந்தே சென்றுள்ளார்.

செல்லும் வழியிலேயே கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட சாலையிலேயே அவர் குழந்தை பெற்றுள்ளார். இது குறித்து தெரிவித்த அப்பெண்ணின் கணவர், குழந்தை பிறந்து 2 மணி நேரம் ஓய்வு எடுத்தோம். அதன் பிறகு 150கிலோமீட்டர் நடந்து சென்றோம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த சாட்னாவின் மருத்துவ அதிகாரி ஒருவர், அவர்கள் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்ததும் பேருந்து மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.