இந்தியா

உ.பி.யில் காதல் ஜோடியை கண்மூடித்தனமாகத் தாக்கிய 2 பேர் கைது

உ.பி.யில் காதல் ஜோடியை கண்மூடித்தனமாகத் தாக்கிய 2 பேர் கைது

webteam

உத்தரப் பிரதேசம் அருகே காதல் ஜோடியைக் கொடூரமாக தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் காதலித்து வந்துள்ளார். இதற்கு அவர்களது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இரண்டு பேரும் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது, அந்த இளம் பெண்ணையும் அவரது காதலனையும் ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்‍கியுள்ளது. இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.