கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடமாநில வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் தரும் செல்லானை அயர்ன் பாக்ஸால் தேய்த்து சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன் தினம் வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஊரடங்கு அனைத்து நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றும் இந்த ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில், 5-ஆம் தேதி அதாவது இன்று இரவு 9 மணியிலிருந்து 9:09 வரை அனைவரும் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறி இருந்தார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வங்கி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்கள் தரும் சல்லானை (bank challan) அயர்ன் பாக்ஸ் கொண்டு சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், முகக்கவசம் மற்றும் கையுறைகளுடன் பணியாற்றும் வங்கி ஊழியர், வாடிக்கையாளர் தரும் சல்லானை கைகளால் தொடாமல் ஸ்கேலால் எடுத்து பிடித்து மேஜை மீது வைத்து அயர்ன் பாக்சால் சுத்தம் செய்த பின்பு பயன்படுத்துவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.