இந்தியா

பீகாரில் இடியுடன் கூடிய மழையால் ஒரே நாளில் 83 பேர் உயிரிழப்பு

பீகாரில் இடியுடன் கூடிய மழையால் ஒரே நாளில் 83 பேர் உயிரிழப்பு

webteam

பீகாரில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களில் இன்று பலத்த மழைக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. அதன்படி பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பீகாரில் இன்று இடியுடன் கூடிய பெய்த மழை காரணமாக 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அதிகபட்சம் 13 பேர் உயிர் இழந்தனர் என மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சிவான் மற்றும் பகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், தர்பாங்கா மற்றும் பங்கா பகுதிகளில் தலா 5 பேர் உயிரிழந்தனர்.

ஒரே நாளில் இடியுடன் கூடிய மழைக்கு 83 பேர் உயிரிழந்திருப்பது பீகார் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணங்களை அடுத்து மாநில முதல்வர் நிதிஷ் குமார் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த வருடம் பீகாரில் வழக்கத்தை விட மழையின் அளவு கூடுதலாக இருக்கும் என்றும் அதனால் ஆறுகளில் நீரின் அளவு அதிகரிக்கும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த 22ம் தேதி எச்சரித்து இருந்தது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு இருக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.