இந்தியா

7 அடி உயர ராமர் சிலையை‌ திறந்து வைத்த உ.பி. முதல்வர்

7 அடி உயர ராமர் சிலையை‌ திறந்து வைத்த உ.பி. முதல்வர்

webteam

உத்தரப் பிரதேசத்தில் ஏழு அடி உயர ராமர் சிலையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்துவைத்தார். 

அயோத்தியாவில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையத்தில் இந்த ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ரோஸ்வுட் எனப்படும் மர வகையில் செய்யப்பட்ட இந்தச் சிலை கர்நாடகாவில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் ராமரின் வாழ்க்கையைக் குறிக்கும் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட கலை மற்றும் கைவினைப் பொருட்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

அயோத்தியாவில்‌ விரைவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஆராய்ச்சி மையத்தில் புதிய ராமர் சிலையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார். 

அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.