இந்தியா

ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் வெயில் : டெல்லியில் 47.6..!

ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் வெயில் : டெல்லியில் 47.6..!

webteam

இந்தியாவிலேயே அதிகபட்சமாக இன்று ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்றும், வட இந்தியாவில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

அத்துடன் டெல்லியின் பாலம் பகுதியில் 47.6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. பாலமில் இது 10 ஆண்டுகளுக்குப் (மே 18, 2010) பின்னர் அடித்த அதிகபட்ச வெயிலாகும். இதேபோன்று டெல்லியின் சஃப்தார்ஜுங் பகுதியில் 46.0 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியது. இது கடந்த 18 ஆண்டுகளாக அங்கு காணப்படாத வெயில் ஆகும்.