இந்தியா

நித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’!

நித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’!

webteam

தண்டுபால்யா கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்களை போதிய ஆதாரம் இல்லை என்று கூறி கர்நாடக நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

பெங்களூர் அருகில் உள்ள பழைய சென்னை சாலையில் உள்ள கிராமம், தண்டுபால்யா. ’பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ என்ற டயலாக் வேறு எதற்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இந்த ஊருக்கு கண்டிப்பாகப் பொருந்தும். 

இந்த கிராமத்தை சேர்ந்த கும்பல், வேலைக்கு செல்வது போல தினமும் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கக் கிளம்பிச் செல்வது வழக்கம். ஆண், பெண் என 30 பேரை கொண்ட இந்த தண்டுபால்யா கும்பலுக்கு இரக்கம் என்றால் என்ன என்பது தெரியாது. முதல் நாள் பணக்கார வீட்டை நோட்டம் விடுவார்கள். மறுநாள் வீட்டுக்குள் புகுந்து ஈவு இரக்கமின்றி, அங்கிருப்பவர்களை கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் செல்வதுதான் இவர்கள் ஸ்டைல்! 

(பூஜா காந்தி)

பாலியல் வன்முறை, கொள்ளை, கொலை இவற்றை முழு நேரத் தொழிலாக செய்துவந்த இவர்களை கண்டாலே குலை நடுங்கும் அனைவ ருக்கும். 1996-ல் இருந்து 2001ம் வருடம் வரை பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இவர்கள் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. சுமா ர் 500-க்கும் மேற்பட்ட கொலைகளை அசால்டாக செய்திருப்பதாக சொல்கிறார்கள் இவர்களை.

கர்நாடகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய இந்த தண்டுபால்யா பற்றி கர்நாடகாவில் 4 திரைப்படங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் பூஜாகாந்தி நடித்தப் படம் பலத்த வரவேற்பை பெற்றது. அந்தப் படம் ’கரிமேடு’ என்ற பெயரில் தமிழில் டப் ஆகி வெளி யானது. பூஜா காந்தி அதில் அரை நிர்வாணமாகவும் நடித்திருந்தார்.

இந்த கும்பலைச் சேர்ந்த 16 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பலர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். 

1999 ஆம் ஆண்டு பனஸ்வாடி பகுதியில் வேதமூர்த்தி என்ற 19 வயது கம்யூட்டர் சயின்ஸ் மாணவர் இந்தக் கும்பலால் கொல்லப்பட்டார். உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தனியாக இருந்தார் வேதமூர்த்தியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு கொள்ளையடித்து தப்பிவிட்டது அந்தக் கும்பல்!

(தண்டுபால்யா படத்தில் சஞ்சனா கல்ராணி)

இந்த வழக்கில் கீழ் கோர்ட், ஆயுள் தண்டனை விதித்தது இக்கும்பலுக்கு. ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மேல் முறை யீட்டு மனு மீதான விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் போதே அந்தக் கும்பலைச் சேர்ந்த சின்னப்பா என்பவர் இறந்துவிட்டார். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் போதிய ஆதாரம் என்று கூறி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தண்டுபால்யா கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணா, திம்மா, வெங்கட்ராமா, தோட்டா ஹனுமா, முனி கிருஷ்ணா விடுதலை செய்திருக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம்.
இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.