‘இன்ஸ்டாமார்ட்’ என்று அழைக்கக்கூடிய புதிய சேவையை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்விக்கி ஸ்டோர்களை அறிமுகப்படுத்திய பின்னர் இது வந்துள்ளது. இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் 45 நிமிடத்தில் வீடு வந்து சேரும்.
தின்பண்டங்கள், ஐஸ்க்ரீம்கள், பானங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அனைத்தையும் இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்யலாம். இந்த விநியோகம் மக்களுக்கு இணையற்ற வசதியை உருவாக்கித் தரும் எனக் கூறப்படுகிறது. இதனால் நுகர்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது சோதனையில் உள்ள இன்ஸ்டாமார்ட் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இதனால் வெறும் 30லிருந்து 45 நிமிடங்களுக்குள் வீட்டிலிருந்த படியே பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
காலை 7 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை இந்த சேவை இருக்கும் . இதனால் நகர்புறங்களில் வாழும் நுகர்வோர்களுக்கு தடையற்ற மளிகைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் என ஸ்விக்கி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.