ஜம்மு - காஷ்மீர் ட்விட்டர்
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரில் தோடாவின் அசார் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

Prakash J

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று (நவ.15) கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் பேருந்து ஒன்று, ட்ருங்கல் - அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இப்பேருந்தில் பயணித்த 40 பேரில் 36 போ் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியின்போது சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ”பேருந்து விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. விபத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு டிவ் காம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "காயமடைந்தவர்களின் தேவைக்கேற்ப அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். மேலும் காயமடைந்தவர்களை மாற்ற ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: IND vs NZ | WC SemiFinals | இந்திய அணி பேட்டிங்... டாஸ் வென்ற ரோஹித் சர்மா கூறியது என்ன?