மத்திய பிரதேசம் முகநூல்
இந்தியா

கைகள் கட்டப்பட்ட மகளின் புகைப்படம்;கடத்தப்பட்டதாக மிரட்டல்! விசாரணையில் அடுக்கடுக்காக வெளிவந்த உண்மை

கடத்தப்பட்டதாக கூறப்படும் 21 வயது பெண்னை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஒரு பயிற்சி பள்ளியில் அவரின் தாய் சேர்த்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பயிற்சி வகுப்பில் சேர்ந்த தனது மகள் கடத்தப்பட்டுவிட்டாள் என தந்தை போலீஸில் புகார் அளிக்கவே, விசாரணையின் மூலம் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் 21 வயது பெண்னை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஒரு பயிற்சி பள்ளியில் அவரின் தாய் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், பயிற்சி பள்ளியில் படித்துவரும் தனது மகள் கடத்தப்பட்டு விட்டதாக கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் தெரிவிக்கையில், தனது மகளின் கை கால்கள் கட்டப்பட்ட புகைப்படம் தனக்கு வந்ததாகவும், கடத்தியவர்கள் 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதில், காவல் துறையினர் அளித்த தகவலின் படி, ”இதுவரை சிறுமிக்கு எதிராக எந்த குற்றமும் நடைபெறவில்லை. ஆகஸ்ட் 3 ஆம் தேதி பயிற்சி பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 5 தேதி வரை மட்டுமே பயிற்சி பள்ளியில் தங்கியதாக தெரிய வந்துள்ளது.மேலும், சுமார் 6-7 மாதங்களாக பயிற்சி பள்ளியிலேயே அவர் இல்லை.

இதனையடுத்து, இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூருக்கு புறப்பட்டு தனது பெற்றோர் தங்கியுள்ள வீட்டிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அங்கு தனது இரண்டு நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார்.

மேலும், பயிற்சி பள்ளியில்தான் படித்து கொண்டிருக்கிறார் என்பதை அடிக்கடி தனது பெற்றோர்களிடம் நிரூபிக்க பல வேலைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்பதற்காக தன் தோழி ஒருவரின் உதவியுடன் தனது இந்தூர் இல்லத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புகைப்படத்தை எடுத்து தனது தந்தைக்கு அனுப்பி 30 லட்சம் ரூபாய்தொகை கேட்டு மிரட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.