புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 பேரின் நியமனம் செல்லும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமிநாராயணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இவ்விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாஜகவினருக்கு சாதகமாக அமைந்துள்ளது.