இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 3.62 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரேநாளில் 3.62 லட்சம் பேருக்கு கொரோனா

Sinekadhara

இந்தியாவில் ஒரேநாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 3.29 லட்சம், நேற்று 3.48 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.62 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,33,40,938லிருந்து 2,37,03,665ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரொனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37,10,525ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 6,426 பேர் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 11,122லிருந்து 6,426ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 4,120 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 2,54,197லிருந்து 2,58,317ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.09%ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 3,52,181 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,93,82,642லிருந்து 1,97,34,823ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 83.04%ஆக உள்ளது.