மகாராஷ்டிராவில் டோம்பிவ்லி மற்றும் கோபார் ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்த 22 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், சார்மி பிசாத் படியில் நின்று பயணித்தார். அவர் பயணித்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் சரியாக நிற்க முடியவில்லை. சமநிலையை இழந்த அவர் விழுந்துள்ளார் என்று தெரிவித்தார். இந்த ஆண்டில் மட்டும் இதேபோன்று நான்கு விபத்துகள் நடந்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
சார்மி, தனது இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் தாயுடன் டோம்பிவ்லியில் வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
“கிழக்கு டோம்பிவ்லி உள்ள போப்பர் காயான் பகுதியில் வசித்து வந்தார். காலை 9 மணியளவில் இவர் உள்ளூர் ரயிலில் நடந்த விபத்தில் தவறி விழுந்தார். பாதிக்கப்பட்ட அவரை டோம்பிவ்லியில் உள்ள சாஸ்திரி நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது தற்செயலான விபத்தில் ஏற்பட்ட மரணம் என்று அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது ”என்று டோம்பிவ்லியைச் சேர்ந்த ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.