இந்தியா

சந்தையில் அறிமுகமானது 2021 MG ZS எலெக்ட்ரிக் கார்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

சந்தையில் அறிமுகமானது 2021 MG ZS எலெக்ட்ரிக் கார்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

EllusamyKarthik

2021 MG ZS எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதனை MG மோட்டார் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 8 தேதியன்று அறிமுகம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 20.99 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு MG நிறுவனம் தனது சேவையை இந்தியாவின் 31 நகரங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்தக் காரில் உள்ள 44.5 KHW ஹை டேக் பேட்டரியின் திறனை கொண்டு அதிகபட்சமாக 419 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட் ரகத்தில் முதன்முதலாக ரெயின் சென்சிங் பிராண்ட் வைப்பரும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை, வெளிர் நீலம் மற்றும் சிகப்பு  நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் பேட்டரி பேக் சிஸ்டத்திற்கு 8 வருடம் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டர் வரையில் உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 3000 யூனிட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் MG நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எக்கோ, ஸ்போர்ட் மற்றும் நார்மல் என மூன்று விதமான டிரைவிங் மோட்களில் இந்த காரை இயக்கலாம்.