ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் காத்ரா ரயில் நிலையத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு உலாவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் வைஷ்ணவ தேவி மலையில் வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. காத்ரா ரயில் நிலையத்தில் வந்துதான் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு செல்வார்கள்.
இந்தநிலையில், காத்ரா ரயில் நிலையத்தில் 15 அடி நீள பாம்பு ஒன்று இருப்பதை கண்டு பக்தர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மிகவும் தடித்த உடலுடன் பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் உள்ள அந்த மலைப்பாம்பு இரும்பு தூணில் ஊர்ந்து செல்வதை போன்ற வேடிக்கை பார்த்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அக்டோபர் 18-ம்தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏராளமான மக்கள் திரண்டு அந்தப் பாம்பை வேடிக்கை பார்ப்பது போல் அந்த வீடியோவில் உள்ளது.