நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான ஆண்டுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வு குறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் அனிதா கர்வால் ஐ.ஏ.எஸ். ஒரு கடிதம் எழுதியுள்ளார். கல்வி என்ன என்பது குறித்தும், தேர்வுகளுக்கும் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
“பள்ளிக்கு வந்து கற்பது வெறும் ஆண்டுத்தேர்வுகளுக்காக மட்டுமல்ல, வாழ்க்கை முழுக்க ஒருவர் கற்றுக் கொண்டே இருக்க போகிறார் என்பதற்கான
அடித்தளம். அதோடு நல்ல விசயங்களையும், மதிப்புகளையும் பெறுவதற்கான வழி ; உங்களுடைய தனித்துவத்தையும், உங்களது ஆற்றலையும் கண்டறிந்து செயல்படுத்துவதற்கான பயணத்தில் மைல்கற்களே இந்த பாடமெல்லாம். அதோடு இங்கு நீங்கள் கற்றுக் கொண்டிருப்பதெல்லாம் உங்களால் முடியும் என்பதை மட்டுமே” என எழுதியுள்ளார்.