இந்தியா

“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்

“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்

webteam

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒரு நாட்டை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் நல்ல முறையில் ஒத்துழைப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

புதுடெல்லியில் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum) சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஜெய்சங்கர் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். அதில்,“தேசிய வாதம் ஒன்றும் எதிர்மறையான விஷயம் அல்ல. இந்தியாவின் தேசியவாதம் பிறநாடுகளுடன் இந்தியா நல்ல உறவை மேற்கொள்வதை தடுப்பதில்லை. ஆகவே தேசிய வாதம் ஒன்றும் எதிர்மறையான விஷயம் அல்ல.

அதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒரு நாடு தவிர மற்ற நாடுகள் அனைத்து நன்றாக ஒத்துழைக்கின்றன. எனினும் அந்த ஒரு நாடும் விரைவில் நல்ல ஒத்துழைப்பிற்கு வரும் என நான் நம்புகிறேன். தற்போது வர்த்தகம், தொழில்கள் மற்றும் இரு நாட்டு மக்களின் இணைப்பு ஆகியவை வளர்ந்து வருகின்றன. அதேபோன்று, அந்த நாட்டிடம் உள்ள சில தவறான மனநிலையும் மாறவேண்டும்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு (BRI)  திட்டத்தில் நாங்கள் எப்போதும் இணைய வாய்ப்பு இல்லை. அதேபோல அது போன்ற திட்டத்தை இந்தியா தொடங்கவும் வாய்ப்பு இல்லை. நாங்கள் எப்போது நாங்களாகவே இருக்கிறோம். பிற நாடுகளின் திட்டங்களை பின்பற்றி எதையும் செய்ய மாட்டோம். அதேசமயம் நாங்கள் பெரிய நாடாக வளர்ந்தால், பிறநாடுகள் ஏற்ற மாதிரியான திட்டத்தையே நாங்கள் முன்னேடுப்போம்” எனத் தெரிவித்தார்.