ஜாம்பி மான் நோய் என்றழைக்கப்படும் தொற்று அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள மான்களுக்கு வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மனிதர்களையும் இந்நோய் பாதிக்கும் என கனடா ஆராய்ச்சியாளர் கவலை அளித்துள்ளார்.
ஜாம்பி நோய் என அழைக்கப்படும் chronic wasting disease அதாவது நாள்பட்ட விரய நோய் என்றழைக்கப்படும் இந்நோய் நரம்பியல் தொற்று நோயாக வரையறுக்கப்படுகிறது. சரியான முறையில் ஒன்று சேராத புரோட்டீன்ஸ் மற்றும் ப்ரியான்ஸ் காரணமாக இத்தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சரியாக ஒன்று சேராத இந்த ப்ரியான்ஸ் தொற்றாக மாறிய பின்பு நரம்பு மண்டலத்தினை பாதிக்கிறது. மேலும் இந்த தொற்று மைய நரம்பு மண்டலம் முழுவதும் பயணித்து, மூளை திசுக்கள் மற்றும் உறுப்புகளில் தங்கிவிடுகிறது. இதன்மூலம் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு ஜாம்பி போன்று செயல்பாடு கொண்டவர்களாக மாறுகின்றனர்.
இத்தொற்று தற்போது அதிகளவில் கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மான்களை அதிகளவில் தாக்குவதாக தகவல் வெளியாகிறது.
ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த ஜாம்பி நோய் பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான ப்ரியான் புரதங்கள் அசதாரணாமாக எண்ணிக்கையில் அதிகரிப்பது மூலம் உருவாகிறது.மேலும் இதனால் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை உண்பதன் மூலம் இத்தொற்று மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நோயின் அறிகுறிகளாக எச்சிடில் வடிதல்,தடுமாறுதல், சோம்பல், வெற்றுப்பார்வை ,தசை விறைப்பு போன்றவைகளகும். இதனால் பாதிக்கப்பட்ட மான்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுக்கு "ஜாம்பி மான் நோய்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் சஸ்காசெவன், ஆல்பர்ட்டா, கியூபெக் ஆகியா இடங்களில் உள்ள மான்களும், மனிடோபா பகுதியில் உள்ள காட்டு மான்களும், அமெரிக்காவில் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிலும் இந்த தொற்று இருப்பதாக முதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் மற்ற பகுதிகளும் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
ஆனால் கனடாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கையில், ”கால்கேரி பல்கழலைக்கழகத்தினை சேர்ந்த ஹெர்மன் ஷாட்ஸ்ல் என்றவர் நடத்திய ஆய்வின்படி, இது மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் மான் கறியை உண்டதால் தொற்று ஏற்பட்டது என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை. என்றும் குறிப்பிட்டுள்ளார்” என்று தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.