சுகாதார வழிமுறைகள்  புதிய தலைமுறை
ஹெல்த்

மழை வெள்ளத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் என்னென்ன?

சென்னையில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

PT WEB

சென்னையில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இதுகுறித்து மருத்துவர் சரவணன் பேசும்போது, “ தேங்கி நிற்கும் மழைநீரால் வைரஸ் காய்ச்சல், மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்களும், தோல் மற்றும் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தடுக்க முடிந்த அளவு வெந்நீர் அருந்துவதோடு கொரோனா காலத்தில் கடைபிடித்ததைப்போல் முகக் கவசம் அணிய வேண்டும். அதேநேரத்தில் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.