ஹெல்த்

நாள்பட்ட அழற்சியால் அவதிப்படுபவரா? - இந்த பழங்களை கட்டாயம் சேர்த்துக்கோங்க!

நாள்பட்ட அழற்சியால் அவதிப்படுபவரா? - இந்த பழங்களை கட்டாயம் சேர்த்துக்கோங்க!

Sinekadhara

உடலில் ஏற்படும் அழற்சிகள் உடலுக்கு எந்த அளவுக்கு தீங்கு விளைவிக்குமோ அதே அளவிற்கு நாட்பட்ட பிரச்னைகளான இதய நோய்கள், மூட்டுவாதம் மற்றும் கேன்சர் போன்ற பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே நாள்பட்ட அழற்சி பிரச்னை இருப்பவர்கள் அதற்கேற்ப உடலை முறையாக பராமரிக்க வேண்டும்.

எனினும், இதுபோன்ற அழற்சிகளை முறையாக பராமரிக்க சரியான உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும். முறையான உணவுகள் மற்றும் தொடர் உடற்பயிற்சி நாள்பட்ட அழற்சியை குறைக்க உதவும். வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் அழற்சியை பெருமளவில் குறைக்கும். அதே சமயம் எல்லா காய்கறிகளும் பழங்களும் அழற்சியை குறைக்காது. சில பழங்கள் மற்றும் காய்கறிகள் சிலருக்கு மேலும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கீழ்க்கண்ட சில பழங்கள் அழற்சியை குறைக்கக்கூடியவை.

பெர்ரீஸ்: ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பழங்கள் பெரும்பாலும் உடலிலுள்ள அழற்சியை குறைக்கக்கூடியவை. இந்த பழங்களில் அழற்சி எதிர்பொருட்களுடன் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளும் அடங்கியிருக்கின்றன.

ஆப்பிள்: ஆப்பிளில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இதில் வைட்டமின் சி, பெக்டின், நார்ச்சத்து மற்றும் பாலிபெனால்கள் நிறைந்திருப்பதால் நாள்பட்ட அழற்சியை குறைக்கும் வல்லமை இதற்கு உண்டு. மேலும் ஆப்பிள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டும்.

திராட்சை: வைட்டமின் சி, கே மற்றும் நார்ச்சத்து நிறைந்தது திராட்சை. சிவப்பு திராட்சையில் பைட்டோ கெமிக்கல்ஸ், ரெஸ்வெராட்ரோல் அதிகளவில் உள்ளது. இது நாள்பட்ட அழற்சியை குறைக்கவல்லது.

சிட்ரஸ் பழங்கள்: வைட்டமின் சி நிறைந்த இந்த பழங்கள் நாள்பட்ட அழற்சியை குறைக்க உதவுகிறது. இந்த வகை பழங்களிலுள்ள பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி மற்றும் பைடோகெமிக்கல்ஸ் போன்ற ஃப்ளாவனாய்டுகள் மற்றும் கரோடேனாய்டுகள் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கின்றன. மேலும் இவை இதயத்தை பலப்படுத்தக்கூடியவை.

மாதுளை: மாதுளையில் வைட்டமின் சி, கே, பொட்டாசியம், நார்ச்சத்து, அந்தோசயனின் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற சத்துகள் உள்ளன. ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நாள்பட்ட அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு.