ஹெல்த்

இன்ப்ளூயன்சா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், கொரோனா... எல்லா பக்கமும் நிரம்பும் வார்டுகள்!

இன்ப்ளூயன்சா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், கொரோனா... எல்லா பக்கமும் நிரம்பும் வார்டுகள்!

webteam

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு வரை தினசரி கோவிட் தொற்று 400 என்று பதிவாகும் நிலை இருந்தது. ஆனால் தற்போது அது படிப்படியாக அதிகரித்து ஒரு நாளில் 500 என்றாகியுள்ளது.

2020 மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பரவிய கோவிட் தொற்றின் தாக்கம் குறைந்து தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்ப்ளூயன்சா பருவக்காய்ச்சல் ஒருபுறம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் இன்ப்ளூயன்சா காய்ச்சல் வார்டுகள் நிரம்பி வருகின்றன. இவைமட்டுமன்றி 300 பேர் வரை டெங்குவோடும், 300 பேர் வரை பன்றிக்காய்ச்சலோடும் சிகிச்சையில் உள்ளனர்.

பருவக்காய்ச்சல் ஒருபக்கம் அதிகரிப்பது மட்டுமன்றி கடந்த 5 நாட்களாக கோவிட் பாதிப்பும் தமிழகத்தில் உயர்ந்து தினசரி 500 பேர் பாதிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை குறைந்து வந்த கொரோனா எண்ணிக்கை 15 ஆம் தேதி முதல் 5 நாட்களாக தொடர்ந்து உயர்வது அச்த்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அளவிலான கொரோனா பாதிப்பு உயர்ந்தது மட்டுமல்லாமல், சென்னையில் கோவிட் பரவல் செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்து 75-லிருந்து 100-ஐ எட்டியுள்ளது. ஏற்கனவே பருவக்காய்ச்சல் பாதிப்புகளுக்கு மத்தியில், மீண்டும் கோவிட் எண்ணிக்கை உயர்வது சுகாதாரத்துறைக்கு அடுத்த சவாலாக பார்க்கப்படுகிறது.