ஹெல்த்

எளிதில் உயிரைப் பறிக்கும் நிமோனியா நோய் : வகைகள் மற்றும் அறிகுறிகள் என்ன?

எளிதில் உயிரைப் பறிக்கும் நிமோனியா நோய் : வகைகள் மற்றும் அறிகுறிகள் என்ன?

Sinekadhara

நிமோனியா மிகக்கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நுரையீரல் தொற்றுநோய். அல்வியோலி என்று அழைக்கக்கூடிய தொற்று நுரையீரல் காற்றுப்பைகளைத் தாக்கி திரவம் அல்லது சீழால் நிரப்பும்போது இந்த பாதிப்பு ஏற்படும். இதனால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுவாசப் பிரச்னை ஏற்படும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் 2 வயதுக்குக் குறைவான குழந்தைகளும், 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் பெரும்பாலாக பாதிக்கப்படுவார்கள்.

பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுகளும் இதில் அடங்கும். சிகரெட் பிடித்தல், ஆல்கஹால் போன்றவை நிமோனியா வரத்தை அதிகரிக்கும்.

அறிகுறிகள்

  • சுவாசிக்கும்போதும், இருமும்போதும் மார்பு வலி
  • கபம் அல்லது சளியை உருவாக்கும் இருமல்
  • சோர்வு
  • பசியின்மை
  • காய்ச்சல்
  • வியர்வை
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • மூச்சுத் திணறல்

ஆர்.எஸ்.வி வைரஸ் சிறுகுழந்தைகளுக்கு நிமோனியா வர முக்கிய காரணம்
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா மற்றும் மைக்கோப்ளாஸ்மா நிமோனியா என்ற பாக்டீரியாக்களால் அதிகம் வரும்.

சிகிச்சை

மூச்சுவிடுவதில் சிரமம், மார்வு வலி, காய்ச்சல், தொடர் இருமல் வந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

2 வயதிற்கு குறைவானவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கீமோதெரபி செய்பவர்கள், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள், தொடர் மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு நிமோனியா விரைவில் தாக்கும்.
இவர்களுக்கு விரைவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே இரண்டு அல்லது மூன்று அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவரை அணுகி எதிர்ப்பு மருந்துகள், சிகிச்சை எடுக்கவும்.