நிபா வைரஸ் கேரளாவில் தென்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
நிபா வைரஸ் என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கும் மனிதர்களிடம் இருந்து சக மனிதர்களுக்கும் பரவக் கூடிய வைரஸ் ஆகும். இது தாக்கியவர்களில் 40 முதல் 75 சதவிகித்தினர் இறந்து விடுவர் என்பதாலும் இதற்கு சிகிச்சை தர மருந்தே இல்லை என்பதாலும் இது மிகவும் மோசமான தொற்றாக கருதப்படுகிறது. இத்தொற்று பரவியதாக தெரியவந்தால் விலங்குகள் வசிக்கும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவதுடன் அது போன்ற விலங்குகளை தனிப்படுத்த வேண்டும்.
நிபா வைரஸ் தாக்கி இறந்த விலங்குகள் உடல்களை பாதுகாப்பான முறையில் எரிக்க வேண்டும். பன்றிகளும், பழந்தின்னி வவ்வால்களும்தான் நிபா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே கடிக்கப்பட்ட பழங்கள் உண்பதை தவிர்ப்பதுடன் மற்ற பழங்களை நன்கு கழுவியும் உண்பது வைரஸ் பரவலை தடுக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.