குரங்கு காய்ச்சல் புதிய தலைமுறை
ஹெல்த்

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல்: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், தடுப்புநடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PT WEB

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

அதில், "காய்ச்சலால் பாதிக்கப்படுவோரிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.

வனப்பகுதிக்குள் கால்நடைகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகள் தினமும் சுத்தம் செய்யப்படவேண்டும். கால்நடை கூடாரங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.