இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் மாதவிடாய் சுகாதாரம் என்பது 34.5% முதல் 96.6% என கணிசமாக வேறுபடுகின்றன.
நாப்கின், மென்சுரல் கப், டேம்பான்ஸ் போன்றவற்றில் மாதவிடாய்க்கால பொருட்களில் ஏதாவதொன்றின் மூலம், ஒரு பெண் பாதுகாப்பான சுகாதாரமான மாதவிடாயை எதிர்கொள்வது.
* உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாவர்.
* குழந்தைகள் எனும்பட்சத்தில், பள்ளி செல்வதை தவிர்ப்பர்.
* சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் இடைநிற்றலுக்கு மாதவிடாய் காரணமாகிறது.
* குழந்தை திருமணத்துக்கும், 18 வயதுக்கு முன்பே குழந்தை பெற்றெடுக்கவும், உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்தில் குறைபாடு பெறவும் வழிவகுக்கும்.
மத்திய இந்தியாவை பொருத்தவரை மாதவிடாய் சார்ந்த சுகாதாரம் என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அந்தவரிசையில் பீகாரில் 59.9%, மத்தியப் பிரதேசத்தில் 61.5%, உத்தரப் பிரதேசத்தில் 74% மற்றும் ராஜஸ்தானில் 85.8% பெண்களே சுகாதாரமாக மாதவிடாயை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலவரம் தமிழ்நாட்டில் 99.1%, கோவாவில் 98.1%, பஞ்சாப்பில் 95.3%, கேரளாவில் 95.2%, ஹரியானாவில் 95.2% பெண்கள் சுகாதாரமாக மாதவிடாயை எதிர்கொள்கின்றனர்.
மாதவிடாய் சுகாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி மத்திய மற்றும் மாநில அரசுகள் வகுத்துள்ள மாதவிடாய்க்கால சுகாதார மேலாண்மை யுக்திகள் மற்றும் அதற்கான திட்டங்கள் என்னென்ன என சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் 4 வார காலத்திற்குள் பள்ளிகளில் குறைந்த விலையில் சானிட்டரி பேட்கள் மற்றும் விற்பனை இயந்திரங்கள் கிடைப்பதற்கும், அவற்றை சரியான முறையில் அகற்றுவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறிப்பிடுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
1991 இல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வானது தொடங்கப்பட்டது. இந்த ஆய்வானது 2015-16ம் ஆண்டு மாதவிடாய் சுகாதார அளவை அளவிடத் தொடங்கியது. 2019-21 NFHS கணக்கெடுப்பின் படி 15-24 வயதுடைய பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாப்கின்கள், சானிட்டரி நாப்கின்கள், டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்துகின்றனர். இதனை "சுகாதாரமான பாதுகாப்பு மாதவிடாய் முறைகள்" என்று வரையறுக்ககின்றனர்.
2015-16 கணக்கெடுப்பின் வரையறையில் மாதவிடாய் கோப்பைகள் என்பது சுகாதாரமான மாதவிடாய்கான முறை என்பதில் சேர்க்கப்படவில்லை. மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் பயன்பாடு என்பது 2015-16 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின் படி தேசிய அளவில் 57.6% ஆகவும், இது 2019-21 இல் 77.3 சதவீதத்தையும் கொண்டுள்ளது என்று NFHS-5 அடிப்படையில் தெரியவந்தது.
ஏறக்குறைய 97.7 சதவீத நாடளுமன்ற தொகுதிகளில் மாதவிடாயை சுகாதாரமான முறையில் கடைப்பிடிப்பதற்கான எண்ணிக்கை என்பது 20.1 சதவீகிதம் அதிகரித்துள்ளது. ஒடிசா அஸ்கா நாடாளுமன்ற தொகுதியில் 54.7 சதவீத முன்னேற்றமும், ராஜஸ்தான் பார்மர் தொகுதியில் 52.5 சதவீதமாகவும், மேற்கு வங்கம் மல்தஹாஉத்தர் தொகுதியில் 49.3 சதவீதம் என்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக மாதவிடாயை சுகாதாரமாக கடைபிடிக்கும் மாநிலங்களில், ஒடிசா, பீகார், ராஜஸ்தான் போன்றவை முறையே 34.5,30.1,29.0 என்ற சதவீதத்தில் அதிகரித்துள்ளது. அதே சமயம் குஜராத்தில் உள்ள மஹேசான, சூரத், பாட்னா, சுரேந்தர நகர், அகமதாபாத் கிழக்கு மற்றும் கேரளாவில் உள்ள பாலக்காடு, திரிச்சூர், சாலக்குடி உட்பட 12 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாதுகாப்பான மாதவிடாயை கடைப்பிடிக்கும் முறை என்பது மிகவும் குறைந்த சதவீதத்தில் உள்ளது.
NFHS தரவுகளின் அடிப்படையில் 15-49 வயதுடைய 57 சதவீத பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.
NFHS தரவுகளின் அடிப்படையில் 15-49 வயதுடைய 57 சதவீத பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.
இரத்த சோகை ஏற்படுதை தடுப்பதற்கான சத்துகளைஅதிகரிக்கும் ஊட்டச்சத்தை வழங்குவதையும், அதனை சரி செய்வதற்கான விழிப்புணர்வு இயக்கங்களையும் நடத்துவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் ஊக்குவிக்கின்றது.
அதுமட்டுமல்லாது இந்த பாதுகாப்பான மாதவிடாய் முறையை ஊக்குவிப்பதன், மூலம் இரத்த சோகைக்கு எதிரான போராட்டதில் இந்தியா இறங்கியுள்ளது. முறையற்ற மாதவிடாய் சுகாதார மேலாண்மை என்பது சிறுநீர் அல்லது இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் இடுப்பு அழற்சி நோய்களுக்கு வழிவகுப்பதாக அமைகின்றது. இந்தியாவில் பொறுத்தவரை சுகாதாரமில்லா மாதவிடாய் பயன்பாடு என்பது அதிக அளவு இரத்த சோகை நோய் உடையவர்களோடு தொடர்புடையதாக உள்ளது.
ஆரோக்கியமான மாதவிடாய் என்பது ஆரோக்கியமான உடல் நலனுக்கு வழிவகுக்கும். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு என்பது கட்டாயமாக எல்லா இடங்களிலும் பேசப்பட வேண்டிய ஒன்று. விழிப்புணர்வு இல்லாமல் போவது பல நோய்களுக்கு வழிவகுக்ககூடியதாக அமையும்.
- Jenetta Roseline S