தாய்லாந்தில் 6 மாத சிறுவனுக்கு கோவிட் 19 சிகிச்சைக்காக ஆண்டிவைரல் ஃபாவிபிரவிர் என்ற மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு அந்த 6 மாத சிறுவனின் பழுப்பு நிற கண்கள் இண்டிகோ நீல நிறமாக மாறி உள்ளது. இந்த சம்பவம் குறித்து லைஃப் சயின்ஸ் வெளியிட்டுள்ளது.
ஃபிரான்டியர்ஸ் இன் பீடியாட்ரிக்ஸ் என்ற இதழியலில் ஏப்ரல் மாதம் இது குறித்து அறிக்கையானது வெளியிடப்பட்டிருந்தது. அதன் படி இந்த 6 மாத குழந்தைக்கு ஏற்பட்ட காய்சல் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே ஃபாவிபிரவிர் மாத்திரையும் அதோடு சிரப்பும் வழங்கப்பட்டது.
இதனை உட்கொண்ட சிறுவனுக்கு 18 மணி நேரத்திற்கு பிறகு பழுப்பு நிறக் கண்கள் நீல நிறமாக மாறியதை அறிந்த தாய். அச்சிறுவனின் கண்களை சூரிய நிறத்தில் உற்று நோக்கவே நீல நிற கண்கள் பிரகாசிப்பதை கண்டறிந்தார். எனவே கோவிட்டால் பாதிக்கப்பட்ட தன் குழந்தைக்கு எடுத்து கொண்ட கோவிட் சிகிச்சையை உடனடியாக நிறுத்தவே 5 நாட்களுக்கு பிறகு குழந்தையின் கண்கள் பழைய நிலையை அடைந்தது.
குழந்தையின் இந்த கண்களின் நிறத்திற்கு எடுத்து கொண்ட மருந்தின் வளர்ச்சிதை மாற்றங்கள் அல்லது டைடானியம் டை ஆக்சைடு, மஞ்சள் ஆக்சைடு போன்ற கூடுதல் மாத்திரை கூறுகளே இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் Favipiravir மாத்திரைகளை ஆய்வத்தில் uv கதிர்களுக்கு கீழே வைத்து ஆய்வு செய்ததில் அவை ஃப்ளோரசன்ட் என்று கண்டறியப்பட்டதாகவும், இந்த ஒளிரும் கூறுகள் கார்னியா போன்ற கண்களின் வெவ்வேறு திசுக்களில் குவிந்துவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதே போல டிசம்பர் 2021 ல் பழுப்பு நிற கண்களை கொண்ட 20 வயது இளைஞனுக்கும் இந்த மாதிரியான நிகழ்வானது நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருமிகளின் மரபணு பெருக்கத்தை தடைசெய்யவும் அப்படி பெருக்கம் செய்யும் பல்வேறு வைரஸ்களைக் கொல்லவும் ஃபாவிபிரவிர் பயன்படுத்தப்படுகிறது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-19 சிகிச்சைக்காக சீனாவில் இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டது. அப்போதிருந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளில் COVID-19 க்கு சிகிச்சையளிக்க இந்த மருந்தைப் பயன்படுத்த அங்கீகாரம் கிடைத்தது. தாய்லாந்தில், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஃபாவிபிரவிர் முக்கிய வைரஸ் தடுப்பு மருந்து செயல்பட்டு வந்தது.