டெங்கு நோய்க்கும் கொரோனா தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,நாட்டில் ஏற்படும் டெங்கு பாதிப்பை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கடந்த 2019-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு 2,05,243 ஆக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு 1,64,103 ஆக குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பு காரணமாக 2008ம் ஆண்டு 1% குறைவாக உயிரிழப்பு பதிவான நிலையில் 2019 ஆம் ஆண்டு 0.1% ஆக உயிரிழப்பு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பெருந்தொற்றுக்கும் - டெங்கு பாதிப்பிற்கும் நேரடி தொடர்புகள் இருப்பதாக எவ்வித அறிவியல் பூர்வமான முடிவுகளும் இல்லை என்றும் டெங்குவிற்கு என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.