ஹெல்த்

கருப்பு பூஞ்சையால் நுரையீரல் பாதிப்பு: அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

கருப்பு பூஞ்சையால் நுரையீரல் பாதிப்பு: அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

webteam

கொரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட கருப்பு பூஞ்சை தொற்றால், நுரையீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில், கருப்பு பூஞ்சை தொற்றால், நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, கோவிந்தராஜனின் உயிரைக் காப்பாற்றியதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கோவிந்தராஜன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். இந்த அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனைகளில் மூன்று முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை செலவாகும் நிலையில், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.