உடல் சார்ந்த உடலுறவு சார்ந்த பிரச்னைகளை பேசவோ, அது குறித்து கலந்தாலோசிக்கவோ எண்ணினாலே அய்யோ.. ச்சீ.. செக்ஸா? என காதைப் பொத்திக் கொள்வதே இந்தியர்களின் குணமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் செக்ஸ் சார்ந்த ஐயங்களை தீர்த்துக்கொள்ளாமல் இருப்பதாலேயே பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் இண்டெர்நெட்டில் கொட்டிக் கிடக்கும் அங்கீகாரமற்ற அறிவியலற்ற உபதேசங்களை பின்பற்றி மேலும் சிக்கலில் சிக்குவோரே அதிகமாக இருக்கிறார்கள்.
தற்போது WET DREAM குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? அதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் என்ன வழிகள் என்பது குறித்து பாலியல் நிபுணரான டாக்டர் சரண்ஷ் ஆங்கில ஊடக தளத்திற்கு அளித்துள்ள பேட்டி குறித்து காணலாம்.
பருவம் அடைந்த ஆண் மற்றும் பெண்களுக்கு இந்த வகை கனவுகள் ஏற்படக் கூடியவையாக இருக்கும். காலை எழுந்த பிறகு உள்ளாடைகளில் ஈரப்பதம் இருப்பதை உணர்ந்து ஒருவேளை சிறுநீராக இருக்குமோ அல்லது வியர்வையாக இருக்குமோ என எண்ண வைக்கும்.
ஆனால் வியர்வை ஒட்டும் தன்மையில் இருக்காது என்பதால் உண்மையில் அது விந்தணுவாகவே இருக்கும். அதாவது ஆண் பிள்ளைகளுக்கு விந்தணுவாகவும், பெண் பிள்ளைகளுக்கு வாஜினல் டிஸ்சார்ஜ் எனக் கூறக்கூடிய ஈரப்பதமாகவே இருக்கும்.
இந்த வெட் ட்ரீம், தூங்கும்போது கனவில் வரும் உணர்ச்சியின் காரணமாக ஏற்படுகிறது. இதனாலேயே விந்தணுக்கள் நிறைந்த திரவ விந்துவாக பருவமடைந்த ஆண்களுக்கு வெளியேறுகிறது. இதேபோலதான் பெண்களுக்கும். அவர்கள் தூங்கும்போது அவர்களுக்கே தெரியாமல் உச்சமடையும்போது வாஜினல் டிஸ்சார்ஜ் ஏற்படுகிறது.
இவை எதுவும் சுய இன்பம் காணுவதால் ஏற்படுவது அல்ல. இது முழுக்க முழுக்க எந்த தூண்டுதலும் இல்லாமல் நடப்பது. இந்த வெட் ட்ரீம் மருத்துவ ரீதியாக Nocturnal Emission என அழைக்கப்படுகிறது.
WET DREAM ஏற்பட என்ன காரணம்?
தூங்கும்போது இனப்பெருக்க உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் அதிகமாக ஏற்படும். இதனால் பருவமடைந்த ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் சுரப்பது நிகழும். அப்படி டெஸ்டோஸ்டிரோன் சுரப்பதால் விந்தணுக்கள் உண்டாகிறது. ஆகவே திரவம் போன்ற விந்து வெளியே ஒரே வழியாக இருப்பது வெட் ட்ரீம்தான். இதுவே பெண்களுக்கு நிகழ்ந்தால் பொதுவாக அது வாஜினல் டிஸ்சார்ஜ் எனக் குறிப்பிடுவதுண்டு.
உடலுறவு சார்ந்த எண்ணங்களால் இந்த வெட் ட்ரீம் ஏற்படுகிறது. கனவில் உடலுறவு தொடர்பான செயல்பாடுகள் நடக்கும் போது உடலில் உள்ள நரம்புகளுக்கு மூளை சிக்னல் கொடுக்கும். அது பிறப்புறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதைதான் ஆர்கசம் எனும் உச்சகட்டத்திற்கு வழிவகுக்கும்.
ஆனால் இது எல்லா சமயத்திலும் வெளிப்படையான உச்சத்தை உணரச் செய்யாமல் பிறப்புறுப்புகள் வழியாக திரவமாக வெளியேற்றிவிடும். இந்த வெட் ட்ரீமால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது. இது ஒரு வயதை எட்டிய பிறகு தானாக நின்றுவிடும். ஆனால் இது தொடர்ந்து நிகழ்ந்தால் அதன் மீது அக்கறையை செலுத்த வேண்டியதாக இருக்கும்.
ஆபாச படங்களை பார்ப்பது, உடலுறவு குறித்து அதிகளவில் அரட்டை அடிப்பது, அது தொடர்பான எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வது வெட் ட்ரீமிற்குள் இட்டுச்செல்லும். அதேபோல, அதிக நாட்களுக்கு உடலுறவு கொள்ளாமல் இருப்பதும் இதற்கு காரணமாக உள்ளது.
மேலும் பருவ வயதை எட்டியதும் அதிகப்படியான விந்தணுக்கள் உருவாவதால் அது வெட் ட்ரீமில் வெளிப்படுகிறது. இதுபோக, தூங்குவதற்கு முன்பு சிறுநீர் கழிக்காமல் படுத்தாலோ, பிறப்புறுப்புகளின் நரம்புகளும் தசைகளும் பலவீனமாக இருந்தாலும் செமன் வெளியாவதற்கு வழிவகுக்கும்.
WET DREAM வந்தால் என்ன செய்வது? எப்படி தடுப்பது?
தூங்கி எழுந்ததும் முதலில் சுத்தமாகிவிடுங்கள். வெட் ட்ரீமால் அசவுகரியமாக உணர்ந்தால் அது குறித்து தேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசித்து உரிய சிகிச்சையை உடனடியாக பெற்றிடுங்கள். டாக்டரிடமோ, உங்களுடைய துணையிடமோ இது குறித்து வெளிப்படையாக பேசுங்கள்.
வெட் ட்ரீமை கட்டுப்படுத்தவோ, தடுப்பதற்கென எந்த குறிப்பிட்ட வழியும் கிடையாது. இருப்பினும், தூக்கத்தில் வெளியாகும் திரவத்தால் அருவருப்பாகவோ, அசவுகரியமாகவோ எதிர்மறையாகவோ உணர்ந்தால் அது உங்களின் வாழ்க்கை முறையில் எதிரொலிக்கும். எனவே அதனை தடுக்க சில வழிமுறைகள் உள்ளன.
அவை, மெடிட்டேட் செய்யலாம் அல்லது ரிலாக்ஸேஷன் தெரப்பி மேற்கொள்ளலாம். முறையான உடலுறவு அல்லது சுய இன்பம் வெட் ட்ரீமை தடுக்கும். பாலியல் நிபுணரோ அல்லது சைக்காலஜிஸிடம் அறிவுறை பெறலாம். குப்புற படுத்து உறங்குவதற்கு பதில் பக்கவாட்டிலோ, நேராகவோ படுக்கலாம்.
இந்த வெட் ட்ரீம் எல்லாரிடத்திலுமே ஏற்பட்டுவிடாது. அப்படி வந்தால் அவை சாதாரணமானதாகத்தான் இருக்கும். அது ஆரோக்கியமான வாழ்க்கையின் அங்கமாகத்தான் இருக்கும். ஆனால் தொடர்ச்சியாக வெட் ட்ரீம் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்வது நல்லது.
ALSO READ: