சிறப்புக் களம்

ஒரு நாள் விடுமுறை.. எங்கே போகலாம்?

ஒரு நாள் விடுமுறை.. எங்கே போகலாம்?

webteam

வார விடுமுறை நாளை குடும்பத்துடன் எப்படி செலவழிப்பது என்று நினைக்கும் சென்னைவாசிகளுக்கு அதிகபட்சமாக 3 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் ஒரு சில இடங்களைப் பற்றிய விபரம்:

நாகலாபுரம் - சென்னையிலிருந்து 77 கி.மீ.

இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடத்தில் அடுத்தடுத்து வரிசையாக இடைவெளி விட்டு அமைந்துள்ள மூன்று குளங்கள் வெகு பிரசித்தம். வாகன நிறுத்ததில் இருந்து குளத்திற்குச் செல்லும் வழியே ட்ரெக்கிங் போல் இருக்கும். மூன்றாவது குளத்தை அடைய சுமார் 13 கி.மீ. நடக்க வேண்டும். நடக்கவும் குளிக்கவும் இயற்கையைக் கொண்டாடவும் நாகலாபுரம் செல்லலாம்.

தடா அருவி - சென்னையிலிருந்து 61 கி.மீ.

ட்ரெக்கிங் அனுபவத்துடன் அருவி குளியலும் வேண்டுமென்றால் தடா அதற்குப் பொருத்தமான இடம். உப்பாலாடுகு அருவி அல்லது தடா அருவி என அறியப்படும் இது சித்தூரில் உள்ளது.

பழவேற்காடு - சென்னையிலிருந்து 88 கி.மீ.

போட்டோ எடுப்பது உங்களது ஹாபியாக இருந்தால் உங்களுக்கு ஏற்ற இடம் பழவேற்காடு பறவைகள் சரணாலயம். இது ரெட் ஹில்ஸிற்கு அருகே உள்ளது. அதிகாலையில் சென்றால் நல்ல வீயூ கிடைக்கும்.

கோவளம் - சென்னையிலிருந்து 35 கி.மீ.

மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் எல்லாமே சலித்து போய்விட்டது, ஒரே கூட்டமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் கோவாளம் கடற்கரைக்கு போகலாம். ரிசார்ட்டில் தங்க வசதி உள்ளவர்களுக்கு தனி பீச் ஏரியாவையும் செட் செய்து தருவார்கள்.

சர்ஃபிங் - 35 கி.மீ.

வார விடுமுறை வித்தியாசமா இருக்கனும் நினைச்சா சர்ஃபிங் போகலாம். கோவாளம் கடற்கறை அருகே இந்த விளையாட்டை கற்று கொள்ளலாம். சர்ஃபிங்கான பிரத்தியேகமான பள்ளியும் கோவாளத்தில் இருக்கிறது.