சிறப்புக் களம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பிரச்னை என்ன?

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பிரச்னை என்ன?

webteam

சினிமா நம்முடைய அன்றாட வாழ்கையில் ஒரு அங்கமா மாறியிருக்குனு சொல்லாம். ஒவ்வொரு வாரம் தொடங்கும்போதும் இந்த வாரம் என்ன படம் வருது எத முதல்ல பாக்கலாம்னு திட்டமிட்டும் ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள்கிட்ட  மிகவும் பிரபலமடைஞ்சிருக்கும் இந்த சினிமா துறை பல பிரச்சனைகளை சந்திச்சுக்கிட்டிருக்கு. அதிலும் குறிப்பா தயாரிப்பாளர்கள் பல வகையில செலவுகள் ஏற்படுது. இதன் காரணமா சில படங்கள் ஹிட்டானாலும் அதோடு முழு பலனையும் தயாரிப்பாளர்களுக்கு சென்றடைவது இல்ல.

நடிகர்களுடைய சம்பளம், தொழில்நுட்ப கலைஞர்களுடைய சம்பளம், சூட்டிங் முடிய அதிக நாட்கள் ஆகுறதால அதிக வட்டினு தயாரிப்பாளர்களுடைய செலவு அதிகமாகிட்டே போகுது. இது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு புறம் தங்களுடைய திரைப்படங்களை திரையிடுறதுக்கும் அதிக தொகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுது.

தமிழகத்துல சுமார் ஆயிரம் திரையரங்குகள் இருக்கு. இதுல நவீன தொழில் நுட்ப புரெஜெக்டர்களை க்யூப், மற்றும் யு.எஃப்.ஓ ஆகிய நிறுவனங்கள் இன்ஸ்டால் பண்ணியிருக்காங்க. இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கும், க்யூப் மற்றும் யு.எஃப்.ஓ நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கு.

ஒரு தயாரிப்பாளர் தான் தயாரித்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு இந்த இரு நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கு. இதுல இரு முறையை இந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்கிறாங்க. அதாவது Long Time Run முறை Weekly Basic முறை. இதுல ஒரு படம் வெளியாகி அந்தப் படம் திரையரங்குள இருந்து எடுக்கும் வரை ஓடுவதற்கு க்யூப் கட்டணம் ஜி.எஸ்.டியோடு சேர்த்து 34 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கு. அதேபோல வீக்லி முறையில் (முதல் வாரத்திற்கு மட்டும்) 12 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரம் வரை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுது. இது தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவாக கருதப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்க தரப்பில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் அதை க்யூப் மற்றும் யு.எப்.ஓ நிறுவனங்கள் ஏற்க மறுத்துட்டாங்க.

இந்த நிறுவனங்கள் அதிக தொகையை வசூலிக்கும் அதே வேலையில் இன்னும் சில நிறுவங்கள் Long Term Run முறைக்கு 12 ஆயிரமும், Weekly முறைக்கு 5 ஆயிரம் வரையும் கொடுத்தால் போதும் நாங்க படத்தை ரிலீஸ் பண்ணி கொடுக்குறோம்னு சொல்றாங்க. ஆனா க்யூம், யு.எஃப்.ஓ நிறுவங்கள் திரையரங்க உரிமையாளர்களோடு 15 வருட ஒப்பந்தம் போட்டிருக்கிறதால அந்த நிறுவனங்களை கொண்டு வர முடியாத சூழல் இருக்கு.

இதனால் அந்த இரு நிறுவனங்கள் மீது தயாரிப்பாளர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர். அதுவும் தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், அந்த நிறுவனங்களை நீக்கியே ஆகனும்னு உறுதியா இருக்காங்க. ஆனா இங்க தயாரிப்பாளர்களுக்குள்ள ஒற்றுமை இல்லாததால இரு நிறுவனங்களை எதிர்த்து போராட முடியாம விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் தவிச்சாங்க.

இந்த நிறுவனங்கள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பலாயிரம் திரையரங்குகளில் தங்களுடைய புரஜெக்டர்களை இன்ஸ்டால் செய்துள்ளனர். தமிழக தயாரிப்பாளர்கள் போலவே மற்ற மொழி தயாரிப்பாளர்களும் அந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் க்யூப் மற்றும் யு.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். இதற்கான அவசர ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தாங்க. இத ஏற்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும், செயலாளர் கதிரேசனும் அந்த ஆலோசனை கூட்டத்துல கலந்துக்கிட்டாங்க. அந்தக் கூட்டத்தின் முடிவுல மார்ச் ஒண்ணாம் தேதியில இருந்து வேலை நிறுத்தத்துல ஈடுபடுறதா தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்காங்க.

தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தை தொடந்து கடந்த வாரம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடைய அவசர ஆலோசனை கூட்டம் நடந்துச்சு. இதுல விஷாலுக்கு எதிர் அணியில இருக்கும் கலைபுலி எஸ் தாணு, அம்மா கிரியேஷன் டி. சிவா உள்ளிட்டோர் கலந்துக்கிட்டாங்க. அந்தக் கூட்டத்துல க்யூப், எ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு எதிரா நாமும் போராட்டம் செய்வோம்னு முடிவெடுத்திருக்காங்க.

இதனால மார்ச் 1ம் தேதியில இருந்து தமிழ், தெலுங்கு ஆகிய படங்கள் வெளியாகாது. இதனால பெரிய வருவாய் இழப்பு அரசுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்படும்னு சொல்லப்படுது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்னொரு கோரிக்கையையும் முன்வைக்கிறாங்க. அதாவது ஆன்லைன் மூலமா ஒரு டிகெட் புக் பண்ணும்போது அதுக்கு சர்வீஸ் கட்டணம் என்ற முறையில ஒரு டிக்கெட்க்கு 30 வசூலிக்கிறாங்க. இத 15 ரூபாய் ஆக குறைக்கனும். அந்தப் பதினைந்து ரூபாயில் இருந்து தயாரிப்பாளர்களான தங்களுக்கு கொடுக்கனும்னு சொல்லியிருக்காங்க. மேலும் தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளபடி பார்க்கி கட்டணத்தை வசூல் செய்யனும், எம்.ஆர்.பி விலைக்கு திண்பண்டங்களை விற்கனும்னு சொல்றாங்க. இதுல ஒரு சில திரையரங்கங்கள் புதிய பார்கிங் கட்டணத்தை வசூலிச்சாலும் பல திரையரங்கங்கள் அதை கடைப்பிடிக்கிறது இல்ல. மேலும் அதிகப்படியான விலைக்குதான் திண்பண்டங்களை விற்பனை செய்யுறாங்க. இதன் மூலமாதான் திரையரங்க உரிமையாளர்கள் மிகப்பெரிய லாபமே சம்பாரிக்கிறாங்க.

இதனால தயாரிப்பாளர்கள் சொல்லும் எதையும் திரையரங்க உரிமையாளர்கள் கேட்கமாட்டாங்கனு சொல்லப்படுது. இதன் காரணமா தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே விரிசல் ஏற்படும்னு சினிமா விமர்சகர்கள் கருதுறாங்க. ஆனா தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும்னு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவங்க சொல்றாங்க. இந்த வேலை நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.

அந்த அறிவிப்பு வெளியான பிறகு தயாரிப்பாளர்கள் சங்கம், க்யூப் மற்றும் யு.எஃப்.ஓ நிறுவனங்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்தியில பேச்சு வார்த்தை நடக்குமா? அல்லது தயாரிப்பாளர்கள் சங்கம் சொன்ன மாதிரி வேலை நிறுத்தம் தொடருமானு பொருத்திருந்து பார்ப்போம்.