சிறப்புக் களம்

அடுத்தடுத்து கார் விபத்துக்கள்... அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

அடுத்தடுத்து கார் விபத்துக்கள்... அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

webteam

வாகன விபத்துகள் எங்கு, எப்போது நடைபெறும் என யூகிக்க முடியாது. கண்சிமிட்டும் நேரத்தில் திடீரென்று நிகழும் விபத்துக்கள், கவனக்குறைவால் மட்டும் ஏற்படுவதில்லை. திறமையான ஓட்டுனர்கள் கூட விபத்தைச் சந்திக்கின்றனர்.

இது போன்ற விபத்துக்கள் நேராமல் பாதுகாக்கவும், விபத்தின் போதும் என்ன செய்ய வேண்டும்?

சீட் பெல்ட்: சீட் பெல்ட் அணிவதால் விபத்து நேர்ந்தாலும் இறப்பை வெகுவாக குறைக்க முடியும். சீட் பெல்ட் அணியும் போது உங்கள் இடுப்பு எலும்புகள் மற்றும் தோள்பட்டை, உங்கள் மார்பு மையத்தில் சரியாக பொருந்தி உள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம்.

வாகனத்தில் வைத்திருக்கும் பொருட்கள்: விபத்தின் போது உங்கள் வாகனத்தில் உள்ள எந்த ஒரு பொருளும் உங்களை இக்கட்டான சூழலிற்கு தள்ள வாய்ப்புள்ளது. எனவே, காரில் கற்கள், கண்ணாடிப் பொட்ருட்கள், விளையாட்டு மட்டை போன்றவைகளை வைப்பதை குறைத்துக்கொள்ளவும். காரை வீட்டிலிருந்து எடுப்பதற்கு முன்பு இதுபோன்ற பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும்.

முதல் உதவி பெட்டி: எப்போதும் முதல் உதவிக்கான கிட் வைத்துக்கொள்வது நல்லது. அதுமட்டுல்லாமல் சீட் பெல்ட் கட்டர், கண்ணாடியை உடைக்கும் கருவி (Glass Breaker) போன்றவற்றை எப்போதும் காரில் வைத்திருப்பது அவசியம்.

விபத்துக்குப் பிறகு:

* வாகனத்தில் இருந்து வெளியேற நினைத்தால் முதலில் அது பாதுகாப்பாக இருக்குமா என்று பார்த்து செயல்பட வேண்டும் . அடிப்பட்டிருந்தால் வாகனத்தை விட்டு வெளியேறாமல் இருக்கையில் இருப்பதே நல்லது.

* உங்கள் கார் சறுக்க தொடங்குகிறது என்றால் ப்ரேக் அழுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* வாகன வேகத்தை அதிகமாக்குவதோ சக்கரத்தின் திசையை மாற்றுவதோ வாகனம் கட்டுப்பாட்டை இழக்க காரணியாக அமையும்.

* சீட் பெல்டை கழற்ற முயற்சி செய்ய வேண்டும். சீட் பெல்ட் பட்டன் வேலை செய்யவில்லை என்றால், மேல் பகுதியை தலை வழியாகவும், கீழ்ப்பகுதியை கால்கள் வழியாகவும் கழற்றலாம்.

* வாகனம் தீ பிடிப்பதை தவிர்க்க இன்ஜினை நிறுத்த வேண்டும்.

* வேகமாகச் சென்று கொண்டிருக்கும் வாகனத்தில் தீப்பிடித்தால், கார் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறக்க முயற்சிக்க வேண்டும்.

* கதவுகள் சென்டர் லாக் சிஸ்டத்தால் திறக்க முடியாத பட்சத்தில் கண்ணாடியை உடைத்து வெளியே வரலாம்.

(Glass Breaker equipment இதற்கு பெரிதும் உதவும்)

* கண்ணாடியை உடைக்க சாதனம் இல்லையென்றால் கையினால் உடைக்க முயற்சிக்கக் கூடாது. கால்களைக் கொண்டு உடைக்க முயற்சி செய்ய வேண்டும்.

*எக்காரணம் கொண்டும் காற்றுத்தடுப்பாக செயல்படும் முன் கண்ணாடியை உடைக்க முயற்சிக்க கூடாது. குறிப்பாக தண்ணீரில் மூழ்கும்போது ...

* வாகனத்தில் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது அவசியம்.