சிறப்புக் களம்

சர்ச்சை சாமியாராக வலம் வந்த ராம் ரஹீம் சிங்

சர்ச்சை சாமியாராக வலம் வந்த ராம் ரஹீம் சிங்

webteam

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கு ராம் ரஹீம், மற்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சர்ச்சைகளை பற்றியும் தற்போது பார்ப்போம்.  

ஜூலை 2002 - ஆசிரமத்தில் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங், மர்மமான முறையில் கொல்லப்பட்டார். பாலியல் வன்கொடுமை பற்றி 2 பெண்கள் அளித்த புகாரை பிரதமர் வாஜ்பாய்க்கு ரஞ்சித் சிங் தெரிவித்ததே அவரின் கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது

அக். 2002 - ஆசிரம மர்மங்களை எழுதிய பத்திரிகையாளர் சந்திர சத்ரபதி, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் இந்தக் கொலையை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

2005 - தனது மனைவி குட்டி தேவி கடத்தப்பட்டதாக கமலேஷ் குமார் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து பல பிரிவுகளில் ராம் ரஹீம் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

2007 - சீக்கியர்களின் மதகுருவான குரு கோவிந்த ‌சிங் போல ராம் ரஹீம் உடையணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஹீமின் சீடர்களுக்கும் சீக்கியர்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 

2012 - ராம் ரஹமீன் உத்தரவின்பேரில் 400 ஆண் பக்தர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாக சீடர் புகார் அளித்தார். இவ்வாறு செய்வதால் கடவுளை உணரலாம் என ராம் ரஹீம் சொன்னதால் பக்தர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.  

2014 - புகாரின் பேரில் ராம் ரஹீம் உள்ளிட்ட சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 

2014 - தேரா சச்சா ஆசிரமத்தில் சட்டவிரோத ஆயுதப் பயிற்சி நடைபெறுவதாக புகார் எழுந்தது. 

2015 - ராம் ரஹீம் நடித்து வெளியான மெசஞ்சர் ஆப் காட் படத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  சென்சார் ஃபோர்டு உறுப்பினர் லீலா சாம்சன் ராஜினாமா செய்தார். 

இவ்வாறு சர்ச்சை சாமியாராக வலம் வந்த ராம் ரஹீம் சிங் இப்போது குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதை ஒரு தரப்பினர் வரவேற்பு அளித்துள்ளனர்.