சிறப்புக் களம்

பாடாமல் பாடிய ஜஸ்டின் பீபர்...ரசிகர்கள் ஏமாற்றம்

பாடாமல் பாடிய ஜஸ்டின் பீபர்...ரசிகர்கள் ஏமாற்றம்

Rasus

பெரும் எதிர்ப்பார்ப்புடன் நிறைய பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகத் தெரிகிறது.

உலகப்புகழ்பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி நேற்று டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைப்பெற்றது. முதல்முறையாக ஜஸ்டின் பீபர் ஒரு இசை நிகழ்ச்சிக்காக இந்தியா வருகிறார் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்தனர். இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ 4000 முதல் ரூ 76000 வரை இருந்தது. பல ரசிகர்கள் மூன்று நாட்களுக்கு முன்பே மும்பை வந்து காத்திருந்தனர். மேலும் சிலர் இசை நிகழ்ச்சிக்கு செல்ல தனி விமானம் பதிவு செய்திருந்தனர். ஆனால் இவ்வளவு செலவு செய்து, கஷ்டப்பட்டு தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களுக்கு ஜஸ்டின் பீபர் ஏமாற்றத்தை மட்டுமே தந்ததாக தெரிகிறது. பாடிய 20 பாடல்களில், 4 பாடல்கள் மட்டுமே அவர் லைவாக பாடினார். பிற பாடல்களுக்கு பாட்டு பின்னால் பாட வெறும் வாயசைப்புத்தான் செய்திருக்கிறார். அதில் கூட சில பாடல்களுக்கு அவர் ஒழுங்காக லிப் சிங்க் செய்யவில்லை என்ற புலம்பியுள்ளனர் ரசிகர்கள்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு தனது மகளுடன் சென்றிருந்த, பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு, எதிர்ப்பார்ப்பு மிகுந்த இந்த இசை நிகழ்ச்சிக்கு ஜஸ்டின் தயாராக இருந்ததாக தெரியவில்லை. மிகவும் புகழ் பெற்ற பாப் பாடகர் இது போல ஏமாற்றம் தரும் நிகழ்ச்சியை தருவார் என நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றார். இந்த இசை நிகழ்ச்சிக்கு வந்த சொனாலி பிந்த்ரே, பிபாசபாசு ஆகிய பாலிவுட் நடிகைகளும் கடுமையான விமர்சனம் செய்திருந்தனர்.

“இந்தியாவின் வெப்ப சூழ்நிலை புதிதாக இருந்ததால் ஜஸ்டின் பீபர் சரியாக பெர்ஃபார்ம் செய்யவில்லை போல தெரிகிறது. லிப் சிங்க் கூட சிரியாக அவரால் செய்ய முடியவில்லை. அடுத்த முறை இந்தியா வரும் போது நன்றாக பெர்ஃபார்ம் செய்வார் என நம்புகிறேன்,” என்றார் ரசிகை ஒருவர்.

ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சியில் எனர்ஜி இல்லை எனவும் அவரும் எனோ தானோ என பெர்ஃபார்ம் செய்து விட்டு அவசரமாக சென்றுவிட்டார் என்று பல ரசிகர்கள் குறை கூறினர். உலக முழுவதும் நடத்தப்படும் ஜஸ்டின் பீபரின் ‘பர்பஸ் டூர்’-யின் ஒரு பகுதியாக இந்தியாவில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.