சிறப்புக் களம்

இந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு ! புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'

இந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு ! புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'

இந்தியாவில் கிரிக்கெட் போட்டி என்றால் வெறி. எந்தளவுக்கு என்றால், "இந்தியாவில் கிரிக்கெட் என்றொரு மதம் இருந்தால் அதற்கு சச்சின்தான் கடவுள்" என கூறும் அளவுக்கு. ஆனால் அதுவே புட்பால் பற்றிக் கேட்டால் அப்படியே எட்டு அடி தள்ளிப்போய் நிப்போம். அப்படிப்பட்ட கிரிக்கெட் வெறியர்களே, இப்போது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை பார்த்து வருகின்றனர் (வேறு வழி).

இதனை மையமாக வைத்தே கிரிக்கெட் ரசிகர்களின், புட்பால் அறிவை கலாய்க்கும் மீம்ஸ்கள் நெட்டிசன்கள் உருவாக்கி இணையதளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். கொஞ்சம் ஓவாராத்தான் போறாங்களோ ? என்ற ரீதியில் இருக்கிறது மீம்ஸ்கள்.

இந்தியாவில் கிரிக்கெட்டைதான் நாம் அதிகம் நேசிக்கும் விளையாட்டு. ஆனால், மற்ற நாடுகளில் கால்பந்துதான் பிரதானம். கால்பந்தாட்டத்தின் மீது தீரா காதல் கொண்டவர்கள் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருக்கும் ரசிகர்கள். இந்தியாவை பொறுத்தவரை குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான் கால்பந்தாட்டத்துக்கு ரசிகர்கள் அதிகம்.

அதில் கேரளாவும், மேற்கு வங்கமும் பிரதான இடத்தை பிடிக்கும். இவற்றை தவிர்த்து பார்த்தால், கால்பந்தாட்டம் குறித்த அறிவும், விவரமும் மிகவும் குறைவு. இந்தியாவை பொறுத்தவரை பீலே, மாரடோனா, ரோனால்டோ, மெஸ்ஸி உலகளவில் கால்பந்தில் இவர்கள் பிரபலம். ஆகையால், இந்தியர்களுக்கும் இவர்களை தெரியும்.

இந்திய ரசிகர்களின் காலப்ந்தாட்ட அறிவை கலாய்ப்பதற்காக, பல கலக்கலான மீம்ஸ்களை நெட்டிசன்கள் உருவாக்கி இணையத்தை கலக்கி வருகின்றனர். இந்தியர்களுக்கு கால்பந்து குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லையென்றாலும், புட்பால் ரசிகர்கள் முன்பு எப்படியெல்லாம் சமாளிக்கிறார்கள் என்று பல்வேறு மீம்ஸ்கள் கலக்கி வருகிறது.

அதேபோல மெஸ்ஸி, ரொனால்டோ எல்லாரும் ஒரே டீமா என கேட்பது. பின்பு, ரொனால்டோ இந்தியாவுக்கு எதிரா எவ்ளோ கோல் அடிச்சாரு என கேட்பது போல ரகளையான மீம்ஸ்கள் வரிசைக் கட்டி அடிக்கின்றது.

இதில் சில மீம்ஸ்கள் கலாய்த்தாலும், நிச்சசயம் 2026 உலக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்கிற பாஸ்டிவ் மீம்ஸ்களும் அதிகம்.