சிறப்புக் களம்

வால்பாறையில் தயாரானது 'போட் ஹவுஸ்'

வால்பாறையில் தயாரானது 'போட் ஹவுஸ்'

jagadeesh

வால்பாறையில் படகு இல்ல பணி நிறைவு பெற்று வரும் நிலையில் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சியளிக்கிறது. முதல் கட்டமாக பரிசோதனை செய்வதற்காக படகு இயக்கப்பட்டு வருகிறது என நகராட்சி ஆணையாளர் பவுன் ராஜ் தகவல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் படகு இல்லம் அமைக்க பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி அதுகுறித்த உத்தரவை வெளியிட்டார்.  அதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், வால்பாறை பகுதியில் படகு இல்லம் அமைக்க இடம் தேர்வு செய்து ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பில் பணி நிறைவு அடைந்துள்ளது.

இந்தப் படகு இல்லத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் படகு இல்லம் கடல்போல் காட்சியளிக்கிறது. முதல் கட்டமாக பாதுகாப்பு நலன் கருதி பரிசோதனை செய்வதற்காக பொது மக்களுக்கு இலவசமாக படகுகள் இயக்கி வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.