சுற்றுச்சூழல்

தென்தமிழகத்தில் தென்படும் நிழல் இல்லாத சூரிய நாட்கள்: வானியல் ஆய்வகம் தகவல்

தென்தமிழகத்தில் தென்படும் நிழல் இல்லாத சூரிய நாட்கள்: வானியல் ஆய்வகம் தகவல்

kaleelrahman

இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் நிழல் இல்லாத சூரிய ஒளி தென்படும் என கொடைக்கானல் வானியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது

இன்றும் நாளையும் தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் அரிய நிகழ்வான, நிழல் இல்லாத சூரிய நாள் நிகழும் என வானியற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இன்று திண்டுக்கல் நகர சுற்றுவட்டார பகுதிகளில் சரியாக நண்பகல் 12.20 மணிக்கும், பெரியகுளம் நகர சுற்றுவட்டார பகுதிகளில் 12.22 மணிக்கு இந்த நிழல் இல்லாத சூரியன் தலைக்குமேல் வரும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை, சிவகங்கை நகர சுற்றுவட்டார பகுதிகளில் சரியாக நன்பகல் 12.18 மணிக்கும், மதுரை நகர சுற்றுவட்டார பகுதிகளில் நன்பகல் 12.19 மணிக்கும், தேனி நகர சுற்றுவட்டார பகுதிகளில் நன்பகல் 12.22 மணிக்கும், திருநெல்வேலியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நன்பகல் 12.20 மணிக்கும், தமிழகத்தில் கடைசியாக கன்னியாகுமரியில் செப்டம்பர் 1ஆம் தேதி நண்பகல் 12.20 மணிக்கும் இந்த நிழல் இல்லாத சூரிய நாள் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது.