சுற்றுச்சூழல்

கடந்த ஆண்டை விட அதிகம்... அமேசான் மழைக்காடுகளில் அதிகரித்து வரும் தீ!

கடந்த ஆண்டை விட அதிகம்... அமேசான் மழைக்காடுகளில் அதிகரித்து வரும் தீ!

sharpana

உலகிலேயே பெரிய பல்லுயிர் பெருக்கத்தைக்கொண்ட அமேசான் மழைக்காடுகளில், தீ அதிகரித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைவிட, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டுமே 28 சதவீதம் தீ ஏற்பட்டிருப்பது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மாதம் அமேசான் மழைக்கடுகளில் 6.803 கிலோமீட்டர் அளவுக்கு தீ பதிவாகியுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தீ பரவும் அளவு 5.318 கிலோ மீட்டராகவும், இப்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

“பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரேசில் நாட்டு அதிபர் அமேசானில் உள்ள நிலத்தை அழிப்பதற்காக திட்டமிட்ட வேலை” குற்றம் சாட்டுகிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.  

இந்த அமேசான் மழைக்காடு என்பது தென் ஆப்ரிக்காவின் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மிகப்பெரிய மழைக்காடு. உலகில் அறியப்படாத 10ல் 1 விலங்கு இங்கு  உயிர் வாழ்கிறது. உலகின் பாதியளவு மழைக்கடுகள் இங்குதான் உள்ளன. இந்த மழைக்காட்டில்தான் 4.100 மைல் நீளத்திற்கு அமேசான் ஆறு பாய்கிறது. உலகின் மிகப்பெரிய உரியின தொகுப்பாக பார்க்கப்படும் இந்த மழைக்காடுகளில் தீ அதிகரித்துக்கொண்டே வருவதால் சூழலியல் ஆர்வலர்கள் கவலைக்கொண்டுள்ளார்கள்.